Monday, July 25, 2011

கலியுகம் பற்றி காரைச் சித்தர்


 
கலியுகம் பற்றி காரைச் சித்தர்
 

யுகமாறிப் போச் சுதடா கலியுகத்தில்
யோகியவன் நிலைமாறிப் புரண்டு போவான்
சகமாறிப் போச் சுதடா சகத்தி லுள் ளோர்
தமைமறைந் தார் பொருள் நினைத்தே தவிக்க லுற்றார்
அகமாறிப் போச் சுதடா காமம் கோபம்
அறுவகையாம் பேய்க்குனங்க ளதிக மாச்சே
புகழ்மாறிப் போச் சுதடா மனிதற் குள் ளே
பூரணர்கள் மறைந்துள்ள ரவரைக் காணே .

காலநெறி யாதுரைப்பேன் கேளாய் கேளாய்
காணவரு மாயிரம வருடத் துள் ளே
பாலமடா வானத்துக கேற்ப பாதை
பகனவெடி சுகனவெடி பண்ணு வார்கள்
சீலமுறும் வர் ணதர் மம் சிதைந்து போகும்
சீச் சீச்சீ வரன் முறைகள் மாறிப் போகும்
கோலமுறிங் குவலயமே சட்ட திட்டம்
கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம்

தீராத புயல் கயெல்லாம் தினமுண்டாகும்
தீக் கங்கு எரிமலைகள் சிரிப்புக் கூடும்
தேராத நோய்க ளெலாம் தின முண்டாகும்
திசை கலங்கும் பூகம்பத் திறமே சாடும்
நேரான நெறியெல்லாம் நடுங்கி யோடும்
நெறியில்லா நெறியெல்லாம் நிறைந் தூ டாடும்
போராகக் குருதிகொப் பளித்துப் பொ ங்கும்
புகையாகப் புவனவளம் புதைந்து போகும்

தெய்வமெலாம் விண் ணாடிப் போகும் போகும்
தீ மையெலாம் மண் ணகத்தின் தெருக்கூத் தாகும்
உய்யுமுண் மை யுளத் துண் மை யோடிப் போகும்
உலகவுண் மை விஞ் ஞானம் கூடி வேகும்
ஐயமில் லை யெனவகங்கா ரந்தான் துள்ளும்
ஐயையோ அகிலமெலாம் கள்ளம் கள்ளம்
துய்யநெறி காட்டி நின்றார் சித்தர் சித்தர்
தூ லநெறி காட்டுகின் றா ரெத்தர் ரெத்தர்.

வெத் துலக விதியெல்லாம் வெப்பம் தட்பம்
விஞ் ஞான விதியெல் லாம் சேர்ப்பும் கூரப்பும்
செத் துலக விதியெல் லாம் யாதம் கூதம்
சீ வனுடல் விதியெல் லாம் காமம் கோபம்
சத் துலக விதியெல் லாம் சகசம் சாந்தம்
தா ன் தா னா த் தான் மயமா த் தழைவே தாந்தம்
சித் துலக விதிசத் தி னோடு சித் தா ய் ச்
சேரனந் தத் தா னந் தச் சீராம் வேராம !!!!!

5 comments:

  1. its true.... end of the world begins..........

    ReplyDelete
  2. சகோதரே...நன்மை.. நீங்கள் செய்யும் காரியம்.. கூடுதல் நன்மை செய்ய இதை இன்றைய தமிழில் இலகுவாக்கி தாருங்கள்.. உண்மையறிய விரும்பும் மக்களுக்கு உதவும் உங்கள் காரியம்

    ReplyDelete
  3. yes...v dont knw the reason 4 dis கலியுகம் பற்றி காரைச் சித்தர்...pls given n a easy tamil

    ReplyDelete
  4. கலியுகம் என்பதே கற்பனை தான்.

    கலியுகத்தில் கண்டபடி நிகழ்வுகள் இருக்குமெனில், அந்தக் காலத்தையும் கடவுளையும் தான் நொந்து கொள்ள வேண்டுமேயொழிய, மனிதனை நொந்து கொள்வதில் நியாயம் எப்படி இருக்க முடியும்?

    இந்தச் சித்தருக்கு இந்த சாதாரண ஏரணம் ( LOGIC ) கூடத் தெரியவில்லை. பாவம் ... உண்மை உணராமலேயே வாழ்ந்து மறைந்து விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. ஓவ்வெறு யுகமும் ஒவெரு மாதிரி இருக்கும் உன்னை போல் அறை குறைகளுக்கு நியானிகள் சொல்வது புரியாது உன் புழுத்தி அறிவு அவர்கள் கால் THUSIKKU சமம் மனிதன் செய்த வினைக்கள் ஒவ்வெறு யுகத்தில் மாறுபடும் இது உன்னை போல் மர மண்டைகளுக்கு புரியாது உண்மை உணராமல் இந்த சாதாரண விசயம் கூட தெரியாத உன்னை போல் ஆட்கள் வாழ்ந்தும் வீன்

      Delete